முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச நீண்டநாட்களின் பின்னர் நாடாளுமன்றில் இன்று உரையாற்றினார்.
பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்திலே அவர் உரை நிகழ்த்துகிறார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தை, பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்காக மாத்திரமே அறிமுகப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதனைவிடுத்து பாதுகாப்பு தரப்பினரை கைது செய்வதற்காக அந்த தடுப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொது தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் முதற்தடவையாக இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
யுத்ததின் பின்னர், நான்கு தடவைகள் தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்க முயற்சித்ததாக குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வெளிநாடுகளின் தேவைகளுக்கமைய செயற்பட வேண்டாம் என அரசாங்கத்தை கோரியுள்ளார்.
