திருகோணமலை சூரியபுர பகுதியில் பதினைந்து வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற ஒருவரை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ருவன் திஸாநாயக்க வியாழக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார்.
சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒன்பதாம் கட்டை பகுதியில் சந்தேகநபர் வசித்து வந்த நிலையில் பக்கத்து வீட்டு சிறுமியை அழைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற போது சிறுமி சென்று பெற்றோர்களிடம் குறித்த விடயத்தை தெரிவித்ததையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் வீட்டில் இருந்த பதினைந்து வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றதாக சூரியபுர பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு செய்தனர்.
அதனை அடுத்து சிறிவிக்கிரம அபேசேக்கர பண்டார வயது (48) என்பவரை புதன்கிழமை (9) இரவு கைது செய்துள்ளதாகவும் சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.