சோபித தேரரின் அகால மரணத்தையிட்டு முஸ்லிம் சமூகம் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளது - MCSL

மாதுலுவாவே சோபித தேரரின் அகால மரணத்தையிட்டு முஸ்லிம் சமூகம் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளது. இந்த எளிமையான பௌத்த துறவி இலங்கையில் சிங்கள, முஸ்லிம், தமிழ் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகங்கள் பார்வையில் ஒரு மாபெரும் அடையாளச் சின்னமாக இருந்தார். 

ஒரு துணிச்சல் மிக்க தலைவரான அவருடைய குடிமை உணர்வு, நீதியை நிலைநாட்டுவதில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் நியாயமான போக்கு என்பன அவரை இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கு மத்தியிலும் பெரும் மரியாதைக்குரிய மனிதராக ஆக்கியது.

2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், வலிமையும் அதிகாரமுமிக்க மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவிக்காக மூன்றாவது முறையாக மேற்கொண்ட முயற்சியினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கொண்ட பொதுவான எதிர்ப்புகளின் போது, ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என்பவற்றை மீண்டும் நிறுவுவதில் அவர் காட்டிய தைரியமான நிலைப்பாடு இலங்கையர்களால் நினைவு கூரத்தக்கவையாகும். தலைமைத்துவமற்று சின்னாபின்னமாக இருந்த எதிரணியினரை ஒன்று திரட்டும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அவர் மாறினார். 

ஜனநாயக விழுமியங்களில் அவருக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும்; இந்த வலிமைவாய்ந்த துறவியின் மீது இலங்கை மக்கள் கொண்டிருந்த அபிமானம் என்பன இலங்கையில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதில் மிக முக்கியமான ஒரே காரணியாக இருந்தது எனலாம். இலங்கையில் நல்லாட்சிக்கான வழிகாட்டியாக, அன்றைய அரசியல் புயலில் சிக்கிவிடாமல் இலங்கை கப்பலைத் திசைதிருப்பிச் செலுத்திய அன்னாரின் திடீர் மறைவு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதை அனைவரும் உணர்கின்றனர்.

பொதுவான எதிரணியென்றைத் திரட்டுவதில் அவரது ஆக்கபூர்வமான அரசியல் வெற்றிக்கு அவரது தனிப்பட்ட செல்வாக்கே காரணமாக இருந்தது. அவர் எப்போதும் பிரிவினை விவகாரங்கள் மற்றும் உட்கட்சிப் பூசல்களைக் கையாளும் சுயநல அரசியல்வாதிகளிடமிருந்து தூர விலகியே இருந்தார். 

அவர் போருக்கு பிந்திய இலங்கையில் உள்நாட்டு கொந்தளிப்பு மூலம் நாட்டினை வழிநடத்தும், பொருத்தமான மனிதராக அரசியல்வாதிகளினதும் பொது மக்களினதும் அன்பையும் பாசத்தையும்; பெறக்கூடிய ஒரு தகைமையைப் பெற்றிருந்தார். 

பொது எதிரணிக்குத் தலைமை தாங்கும்படி அழைக்கப்பட்டமை, மாதுலுவாவே சோபித தேரர் மீது முற்போக்கு அரசியல்வாதிகள் மற்றும் குடிமக்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு சான்றாகும். அவர் நாட்டின் செழிப்பை நோக்கிய பயணத்துக்கு இடையூறாக இருந்த போருக்கு பிந்திய இலங்கையின் நல்லிணக்கத்துக்கான அச்சுறுத்தல்கள், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பூட்டும் பிரசாரம் என்பவற்றுக்கு எதிராக எழுந்து நின்றார்.

அவர் கோட்டே நாக விகாரையின் தலைமை மதகுருவாக இருந்தார். தாழ்மையான பின்னணியிலிருந்து வந்த தேரர்; மதம், சாதி அல்லது குலம்; என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் ஏழை எளியவர்களுக்காகவே வாழ்ந்தார். அவர் அரசியல் களத்தில் ஒரு வெற்றி வீரராக அனைவருக்கும் நீதி என்ற அவரது நாட்டத்தில் எந்த உயிரினமும் எந்த நோவினையையும் அனுபவிக்கக்கூடாது என்ற நோக்கில் அகிம்சையை மேற்கொண்டு வாழ்ந்தார்.

இலங்கையர்கள் என்ற வகையில், நாம் இந்த சிறப்புமிக்க மனிதருக்கு செலுத்தக்கூடிய மிகப் பெரிய மரியாதை அவர் தனக்கும் தனது தலைமைத்துவத்தை நாடிய மக்களுக்கும் ஏற்படுத்திய வழிமுறைகளில் நாம் வாழ்ந்து காட்டுவதேயாகும். இலங்கையின் ஒருமைப்பாட்டை உறுதிசெய்து அமைதிஇ நிலையான வளர்ச்சி என்பவற்றுக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பு மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற அவரது வெளிப்படையான கோரிக்கை மேலும் காலதாமதம் இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும்.

 இதுவே, இலங்கையில் வாழும் சிங்கள பௌத்தர், முஸ்லிம்கள், தமிழர், கிரிஸ்துவர் மற்றும், ஏனைய சமூகத்தினர் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாகவும் ஆசானாகவும் விளங்கிய இந்த பௌத்த துறவிக்கு இந்த நாடு செலுத்தும் அஞ்சலி இருக்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -