எம்.வை.அமீர்-
றிசாத் பதியூதீன் பவுண்டேசன் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுத்துவரும் மக்கள் நல திட்டங்களில் மாணவர்களின் கல்வி மேன்பாட்டுக்கு உதவும் திட்டத்தின்கீழ் இவ் வருடம் க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச மாதிரி வினாத் தாள்களை குறித்த மாதிரி வினாத் தாள்களுக்கு விண்ணப்பித்த பாடசாலை அதிபர்களிடம் வழங்கி வைக்கும் நிகழ்வு 2015.11.10ம் திகதி அன்று சம்மாந்துறை விளையாட்டுக் கட்டடத் தொகுதியில் (Sports Complex) இடம்பெற்றது.
றிசாத் பதியூதீன் பவுண்டேசனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் றிஸ்டி சரீப் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தென் கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக உப வேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் அவர்கள் தலைமை வகித்தார்.
நிகழ்வுக்கு தென் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம்.கலீல், ஆங்கில மொழிப்பிரிவின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.ஜௌபர் மற்றும் விரிவுரையாளர் எம்.ஏ.எம்.பௌசர் போன்றோரும் பங்குகொண்டு இலவச மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய பொதிகளை வழங்கி வைத்தனர்.








