தோப்பூர் ஏ.எஸ்.எம்.தாணீஸ்
சாய்ந்தமருது பிரதேச சபை, தோப்பூர் பிரதேச செயலகம் என்பன பதிய வருடத்திக்குள் அப்பிரதேச மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும்,நீர் வழங்கள் வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கிடப்பில் போடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளாக அல்லாமல் புதிய வருடத்தில் அப்பிரதேச போராளிகள், கட்சியின் மத்திய குழுக்கள்,அவ்வப்பிரதேச ஊர்த்தலைமைகள் ,கட்சியின் மாவட்ட தலைமைகள் அழுத்தங்களை பிரயோகித்து இவைகளை வெண்றெடுக்க முன் வரவேண்டுமென்று அவர் குறிப்பிட்டார்.
கண்டி பொல்கொல்ல கூட்டுறவுச் சங்க மஹிந்த ராஜபக்ச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 07 நடைபெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 26வது கட்சியின் பேராளர் மாநாட்டில் கட்சியின் 15 வருடமாகவும் தொடர்ச்சியாக கடசியின் தேசியத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் பேராளர்கள் மத்தியில் சிறப்புரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பாக தற்போது நாட்டில் வர்த்தமானி அறிவித்தல் விடப்பட்டு எதிர்வரும் 21ம் திகதிக்கு முன் மாற்று யோசனைகளை முன்வைக்குமாறு அரசாங்கத்தினால் கோரிக்கை விடப்பட்டிருக்கின்ற இத் தருனத்தில் கட்சியினால் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் அப்பொறுப்புக்களை சரிவர நிறைவேற்ற வேண்டுமெனவும் தலைவர் கேட்டுக் கொண்டார்.
உள்ளுராட்சி தேர்தலொன்று புதிய முறையில் நடக்குமாக இருந்தால் நடந்திருக்கின்ற எல்லை நிர்ணயத்தின் படி எமது சமூகத்திக்கும்,கட்சிக்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமையும்.
கட்சியையும்,சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவே பிராந்திய ரீதியாக செயற்பாட்டாளர்கள் பொறுப்புடன் செயற்பட்டு எல்லை நிர்ணயம் தொடர்பான குறைபாடுகளை ஆவனங்களாக தயாரித்து இரு வாரத்திக்குள் பிரேரனைகள் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் அவர் தனதுரையில் கேட்டுக் கொண்டார்.
கட்சிக்குள் இளைஞர்களையும்,பெண்கள் சமூகத்தையும் இணைத்துக் கொண்டு பயணிக்கின்ற தேர்தல்கால வெறும் பயணமாக இனிவரும் காலம் அமையாது அரசியல் பதவிகளுக்காக தலைமைத்துவ ஆளுமைகளை வளர்த்துக் கொள்கின்ற,இச் சமூகத்திக்கு வழிகாட்டுகின்ற ஒரு தயார்படுத்தல் மட்டுமல்லாது இளைஞர் அணியையும், மகளிர் அணியையும் சுதந்திரமாக தனித்துவத்தடன் தனித்து இயங்குகின்ற எமது கட்சிக்குள் இது ஒரு பேரியக்கமாக வளர்ப்பதற்கான மாற்று சூழல் உருவாக்கப்படும் அதேவேளை இளைஞர் காங்கிரஸ் மாநாடுகள்,மகளிர் மாநாடுகளை நடாத்தி மாவட்டம் மாவட்டமாக பயிற்சி பட்டறைகளை நடாத்தி அடுத்த கட்ட அரசியலை முன்னெடுக்கக் கூடிய நிலமை உருவாக்கப்படும் என தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கடந்த 10 வருடங்களில் சந்தித்த இழப்புகள் ,துன்பவியல் சம்பவங்கள் யுத்தத்திற்கு பின்னரான சூழலில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள்,அச்சுறுத்தல்கள் இந்நாட்டில் அரங்கேறி இதற்குள் எம் சமூகம் சிக்குன்ட வரலாறுகள் எம்முன் இருக்கின்றன இவற்றுக்கு பகரமாக நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டுவரப்பட்டு ஆட்சியின் பங்காளர்களாக நாங்கள் இருப்பதோடு நெருக்கடியான சூழலிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதை உணரமுடிகிறது.
எனவே கட்சியின் பதவி வழியில் இருப்பவர்கள் இவ்ஆட்சியிலிருந்து பாரிய எதிர்பார்ப்புகளை எதிர்பார்ப்பதோடு உள்முரண்பாடுகளை கழைந்து புதிய வீரியத்தோடு பயணிக்க முன்வரவேண்டுமென்று தலைவர் கேட்டுக் கொண்டார்.
அச்சத்தோடும்,பீதியோடும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியுள்ளது வடமாகாணத்தில் இதுவரை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை முதற்தடவையாக இழந்துள்ளனர் அதேபோன்று திருகோணமலை மாவட்ட போராளிகளும் பிரதிநிதித்துவமின்றி தவிக்கின்றனர்.கட்சி ஒரு காலமும் வண்ணி மாவட்ட மக்களை கை விடாது கட்சி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். கட்சி எல்லோருக்கும் தகுந்த அந்தஸ்த்தை வழங்கும் காலம் சென்றுவிட்டாலும் இதற்கான விசாலமான மணதினை வைத்துக் கொள்ள வேண்டும் என தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தனதுரையில் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பேராளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை அழங்கரித்தனர்.
