செய்தியாளர்- எம்.எம்.ஜபீர்
அம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக சடயந்தலாவ குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் 03 அடி மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக சவளக்கடை விவசாய கேந்திர நிலையத்தின் கீழுள்ள சடயந்தலாவ அணைக்கட்டு இன்று (14) உடைப்பெடுத்துள்ளது.
அத்துடன் அவ்விவசாய கண்டத்தில் விதைப்புகள் நிறைவடைந்த 535 ஏக்கர் வேளாண்மை முற்றாகவும், 4600ற்கு மேற்பட்ட வயல்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.
அம்பாரை மாவட்டத்தில் மழை காரணமாக உரிய காலத்தில் விதைப்பு வேலைகளை மேற்கொள்ள முடியாது விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


