நல்லாட்சிக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருக்கும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரியுள்ளார்.
ஊழல்வாதிகள் மீது அரசாங்கம் நடவடிக்கையை முன்னெடுக்கும் போது அதனை மறைக்க விஜயதாஸ முயல்வதாக சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே நல்லாட்சிக்கு எதிராக செயற்படும் அவரை பதவியில் இருந்து நீக்கி ஜனவரி 8ஆம் திகதி மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று பொன்சேகா கோரியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்குகளால் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வரமுடியாது என்ற அடிப்படையில் தற்போது அவர் ராஜபக்சவினருக்கு வெள்ளையடிப்பதாக சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது, ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக 2000 மில்லியன் ரூபாய்கள் திரட்டப்பட்டதாக விஜயதாஸ ராஜபக்ச சுமத்திய குற்றச்சாட்டை நிராகரித்துள்ள சரத் பொன்சேகா, 250 மில்லியன் ரூபாய்களே திரட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
