நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பான விவாதங்களில் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்னிலை வகித்து வருகிறார்.
மத்துகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவன்கார்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்தார்.
அரசாங்கத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் இருக்கும் எதிரிகள் தற்போது ஒன்றாக இணைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நல்லாட்சியும் அவன்கார்ட் விடயமும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டதல்ல. தகுதியில்லாதவர்களும் நாட்டில் அரசியலில் ஈடுபடும் நிலைமை காணப்படுகிறது.
சில அமைச்சர்கள் பஸ் நடத்துனர் பதவிக்கும் தகுதியற்றவர்கள் எனவும் அமைச்சர் ராஜித மேலும் குறிப்பிட்டுள்ளார்.
