பாரீஸ் தாக்குதல்- முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா பத்திரிகை அறிக்கை.!

என்.எம்.அமீன் -
டந்த வெள்ளியன்று பாரிஸ் நகரில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் மூலம் ஐ.எஸ். முழு உலக முஸ்லிம்களினதும் இஸ்லாத்தினதும் பிரதிமையைக் களங்கப்படுத்தும் இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான ஒரு பயங்கரவாதக்குழு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. 

இஸ்லாம், அப்பாவி உயிர்களைப் பறிக்கும் செயலை நிராகரிக்கும் கருணை மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு மதமாகும். போர்க் காலங்களில் கூட, அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதை இஸ்லாம தடைசெய்கிறது. இஸ்லாத்தின் பெயரால் பயங்கரவாதம் அல்லது வன்முறை மூலம் மேற்கொள்ளப்படும்; எந்த குற்றச் செயலுக்கும் எந்த இறையியல் அடிப்படையும் கிடையாது. 

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா இஸ்லாத்திலும் அல்லது எந்த ஒரு நாகரீக சமுதாயத்திலும் காணமுடியாத இந்த பயங்கரவாத செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.

சிரியா, ஈராக் மற்றும் பிற அரபு நாடுகளின் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தப் படுகொலைகளையிட்டு முஸ்லீம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா அதிர்ச்சியடைந்துள்ளது. 

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும், குறைந்தது 80 பேர் ஆபத்தான நிலையிலும் 127பேர் இறந்துள்ள நிலையிலும் பாரிஸில் இடம்பெற்ற இந்த பெரும் தாக்குதலின் மூலம் மேற்கத்திய உலகுக்கு தங்கள் கொலை வெறியை விஸ்தரித்துள்ளனர். பாரிஸ் தாக்குதலுக்கு ஒரு நாள், முன்பதாக, பெய்ரூட் தற்கொலைக் குண்டு தாக்குதலில் 43பேர் இறந்தும்; 239பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். சிரியாவில் உள்ள ஐஸிஸ் முகாமிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு குழுவினரே இத்தாக்குதலை மேற்கொண்டதாக உயிர் தப்பிய ஒரு பயங்கரவாதி ஒப்புக்கொண்டுள்ளார். 

இஸ்லாமிய அரசு அல்லது கிலாபத் (முன்னர் ஐசிஸ் என அழைக்கப்பட்ட) எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் இந்த குழு உலகத்துக்கும் இஸ்லாத்துக்கும் ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது. 

இக்குழு, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனிதாபிமான சட்டத்தையும் ஷரியா சட்டத்தையும் மீறியுள்ளது. பிரான்ஸ்மீதான அவர்களது இலக்கு மத்திய கிழக்கில் அப்பாவி முஸ்லிம்களைப் பழிவாங்கத் தூண்டும் செயலாகவோ அல்லது இக்குழுவினரின் அட்டூழியங்களுக்கு அஞ்சி பாதுகாப்பான நாடுகளில் தஞ்சமடையும் முஸ்லிம் அகதிகளைத் தடுத்து நிறுத்தும் செயலாகவோ இருக்கலாம் என்பதால் சர்வதேச சமூகம் மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்;. இது உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான பதிலடித் தாக்குதல்களைத் தூண்டிவிடக்கூடியதாகவும் அமையலாம்.

இந்த பயங்கரவாதச் செயல்கள்; மற்றும் பிரதான இஸ்லாமிய சித்தாந்தங்களை மதிக்க தவறிய அவர்களின் நடவடிக்கைகள் என்பவற்றுக்காக ஐ.எஸ் மற்றும் அதன் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதியைக் கண்டிப்பதில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் எந்த வேறுபாடுகளுமின்றி உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய தலைவர்களுடன் ஒன்றிணைகின்றனர். அவர்களது நடவடிக்கைகள் அனைத்தும் இஸ்லாத்துக்கு முரணானதும் மனிதாபிமானமற்றதுமாகும்.

இந்த குற்றவாளிகள் அவர்களது அடாத செயல்களுக்காக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்;. சர்வதேச சமூகம் ஐ.எஸ்ஸின் கொடுமைகளையும் உலகின் கொந்தளிப்பு நிலையைத் தோற்றுவிக்கும் இது போன்ற ஏனைய அனைத்து பயங்கரவாத குழுக்களையும் இல்லாதொழிப்பதில் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -