பொத்துவில் தாஜகான்-
அத்தியாயம் -01
இவருடைய பிறப்பு பற்றி நான் அறியவில்லை. ஆனால் அவருடைய இறப்பு வித்தியாசமானது, விரும்பப்படக்கூடியது....ஒருநல்ல மார்க்கத்தின் தூண் மரணத்திருக்கின்றது.....பொத்துவில் பகுதியில் மார்க்கத்தில் முற்றுமுழுதாக தன்னை அர்ப்பணித்து பல சமூக சேவைகளை முன்னின்று செயற்படுத்தியவர்.... பசில்ளெலவி முழுப்பொத்துவிலின் உள்ளங்களிலும் உச்சரிக்கப்படுகின்ற நாமம்.......சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் மதரசாவில் ஆலிம்பட்டம் பெற்றவர்......சிலர் ஆலிமாக வந்தவுடன் தன் கடமைகளையும், பாதையினையும் மறந்து செயற்படுகின்ற இத்தளத்தில் விசித்திரமான மனிதனாக இவரைப்பார்க்கின்றேன்....
ஆலிமாக வந்த நாள் முதல் பொத்துவில் தப்லீக் பிரச்சாரத்தில் தன்னை முழுமைப்படுத்தினார்....பொறுப்புதாரியாக மர்க்கஸ் இவருக்கு மணிமகுடம் சூடியது........2.5 மணித்தியாலயம் 3 நாள், 40 நாள், 4 மாதம், உள்நாடு, வெளிநாடு, மஹல்லா வேலைகளில் முற்றுமுழுதாக தன்னை ஈடுபடுத்தியவர்...
அத்தியாயம் -02
நேர்மையான முறையில் பொத்துவிலின் சபுர்முகைதின் அமிர்சாப் மகளை திருமணம் முடித்தார்....முழுக்குடும்பமும் தீனோடு வளர்க்கப்பட்டார்கள்......ரமலானின் இறுதிப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் இஹ்திகாப் இருப்பவர்.....பொத்துவிலின் அரபிக்கல்லூரியின் விரிவுரையாளர், பொத்துவில் அனைத்து பள்ளிவாயல் சம்மேளத்தலைவர் (இப்பதவியை இவர் விரும்பவில்லை மக்கள் விருப்பத்துடன் தேர்வுசெய்தார்கள்) பொத்துவிலின் மார்க்கப்பிரச்சினைகள், அரசியல் சமூகப்பிரச்சினைகளுக்கு சரியான நேர்வழிகளை காட்டி வருபவர்...வந்தவர்......சாமானுக்காக உழைக்காமல் ஈமானுக்காக உழைத்தவர்....அதனால் இவருடைய மரணம் அதிசயம்தான்
அத்தியாயம்-03
வக்தில் இருக்கும் பொழுது இரத்தினபுரியில் தஹஜ்ஜத் தொழுகைக்காக எழுந்த பொழுதில் சாய்ந்து விழுந்தது தப்லீக் எனும் மரம்......
கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி சுபஹ் நேரத்தில் மலக்கல் மௌத் உயிரைக்கைப்பற்றினார்கள்.....
அவருடைய ஜனாசா வீடுநோக்கி வந்தது இரவு 7.30 மணியளவில்....இவருடைய ஜனாசாவை பார்ப்பதற்கு வந்த சனத்தை பார்த்த பொழுது பிரம்மித்தேன்...... முழு இலங்கையின் தப்லீக் பொறுப்புதாரிகள் சூறா ஜமாத்தினர் மதரசாவின் மாணவர்கள் ஆலிம்கள், ஹாபிழ்கள் முழுப்பொத்துவில் மக்களும்..... கார், வேன், பஸ், ஆட்டோ வாகன நெரிசல் ஒருபக்கம்.... நான் உம்ராவுக்கு சென்ற பொழுது கஅபாவை வலம் வருகின்ற பொழுதில் சந்தித்த நெருக்குதலை நேற்று இரவு அநுபவித்தேன்.......
மெல்ல மெல்ல சென்று ஜனாசாவைப்பார்த்தேன் என்ன அதிசயம் சிரித்த முகத்தோடு ஒளிப்பிரகாசத்தோடு கண்டேன் இது சத்தியம் அவர் முகம் மாத்திரம் ஒளியாக எனக்குத்தோன்றியது........
உணர்ந்தேன்....அல்லாஹ்வின் விருப்பத்திற்கு உரியவராய் ஆகும் பொழுதில் இறைவன் கொடுக்கும் அற்புதம்..........
ஜனாசா இரவு 10.30. அளவில் மர்க்கஸ் நோக்கிச்சென்றது........மர்க்கஸ் கட்டிடம் போதாது சனம்....கோடான கோடி மக்கள் அவருக்கு பிரார்த்தனை புரிந்தார்கள் அதை பார்த்தேன் நிச்சயம் இன்ஸா அல்லாஹ் இவர் சுவர்க்கவாசிதான். இவரின் வெற்றிடத்தை இனி யார் நிரப்புவது இறைவா இவரைப்போன்ற தலைவர்களை உருவாக்குவாயாக?
