அட்டாளைச்சேனை : பேண்ட் வாத்திய சீருடை வழங்கும் வைபவம்

 எம்.ஜே.எம்.சஜீத்-

ன்று அரசு இலவச கல்விக்காக நிதியினை அதிகமாக செலவு செய்கின்றது அரசின் நோக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக அதிபர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் மிகவும் அர்பணிப்புடன் செயற்படவேண்டும் என முன்னால் கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி அமைச்சரும் தற்போதய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கான பேண்ட் வாத்திய சீருடை வழங்கும் வைபவம் கோட்டக்கல்வி பணிப்பாளர் எம். ஏ. சி. கஸ்ஸாலி தலைமையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாகாண சபை உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அக்கறைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் அஷ்சேக் ஏ.எல்.எம்.ஹாசிம் உட்பட கல்விமான்களும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நீண்ட காலமாக இப்பாடசாலை மாணவர்கள் பேன்ட் வாத்திய சீருடை இல்லாமல் பல சிரமங்களை எதிர் நோக்கி வந்தனர். இந்த சீருடையை பெற்று தந்த மாகாண சபை உறுப்பினருக்கு பாடசாலை அபிவிருத்தி குழு நன்றியினை தெரிவித்து கொண்டது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -