எவன்-கார்ட் சம்பந்தமான விஷேட தகவல்களை வெளியிடும் ஊடக சந்திப்பு ஒன்று நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எவன்-கார்ட் மெரிடய்ம் சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளை காலை சாட்சிகளுடன் பல தகவல்களை வெளிப்படுத்தவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இது சம்பந்தமான கலந்துரையாடலின் போது இடம்பெற்ற விடயங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் தனது கருத்துக்களை தெரிவிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பலர் இதில் சிக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
