படிக்காத மேதை ஒசாமாவின் நாணயம்..!

ன்று இஷா தொழுகையை புனித காஃபாவில் தொழுதுவிட்டு வெளியே வந்த போது.. பள்ளிவாசலின் வெளி வளாகத்தில் ஒசாமா என்ற ஓர் அரபு இளைஞன் டிஸ்ஸு பேப்பர் விற் பனை செய்து கொண்டிருந்தார்.

அவரைக் கடந்து செல்லும் போது என்னை அழைத்து அவர் டிஸ்ஸு விற்று சேர்த்த பணத்தை எவ்வளவு இருக்கிறது என எண்ணிக் கொடுக்குமாறு கேட்டார். ஏன் உனக்கு எண்ணத் தெரியாதா? என நான் கேட்டேன்.

அதற்கு அவர் ஒரு ரியால் பணமாக இருந்தால் எண்ணி விடுவேன் இது போல் பத்துஅஞ்சு ரியால்கள் சேர்ந்தால் எண்ணுவது சிரமம் என்றார்.

நானும் அவர் பணத்தை எண்ணி மொத்தம் 86 ரியால்கள் உள்ளது பத்திரமாக வைத்துக்கொள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அரபி ஒருவர் ஒசாமாவிடம் பத்து ரியால் கொடுத்து ஒரு ரியாலுக்கு டிஸ்ஸு வாங்கி விட்டு, மொபைலில் பேசிக்கொண்டே மீதி 9 ரியாலைப் பெறாமலே மறந்து போய் விட்டார்.

ஆனால், ஒசாமா  அந்த அரபியை விடாமல் பின்தொடர்ந்து சென்று அவர் கையில் மீதித் தொகையை கொடுக்க ஓடினார் அப்போது, அந்த அரபி ஏதோ பேச ஒசாமாவோ ஒரேயடியாக மறுத்து அவர் கையில் பணத்தை செலுத்திவிட்டு வந்தார் திரும்பி வந்தவரிடம் ஏனப்பா அவர்தான் போய்விட்டாரே அந்த பணத்தை நீயே வைத்துக் கொண்டிருக்கலாமே??"என்று நான் கேட்டதற்கு

இல்லை சகோதரரே  என் தந்தை என்னை வியாபாரத்துக்குஅனுப்பும் போதெல்லாம் இரண்டு அறிவுரைகளை சொல்லி அனுப்புவார் ஒன்று மகனே நீ யாருக்கும் மோசடி செய்து விடாதே...!

ஏனெனில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மோசடி செய்பவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என எச்சரித்துள்ளார்கள் வியாபாரத்தில் நட்டம் அடைந்தாலும் பரவாயில்லை அது இந்த உலகை மட்டுமே பாதிக்கும் ஆனால் மோசடி செய்துவிட்டால் அது உன் மறுமையையே பாதித்துவிடும் இரண்டு யாரிடமும் யாசகம் பெற்று விடாதே உழைத்து உண்ணும் உணவே சிறந்த உணவு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் இதனாலேயே நான் அந்த அரபியிடம் அவர் பணத்தை ஒப்படைத்தேன் நான் என் இறைவனுக்கு அஞ்சுகிறேன் என்றார் பாருங்கள்...
ஸுப்ஹானல்லாஹ்..

என் கண்களில் கண்ணீர் துளிகள்..

IAS, IPS, MBBS, என மெத்தப்படித்த மேதாவிகளெல்லாம் ஊழல் செய்து ஊரை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கும் போது படிக்காத இந்த ஒசாமா "ஒரு படிக்காத மேதைதான் இறையச்சமுள்ள ஒரு சகோதரனை சந்தித்த மகிழ்ச்சியில்...

படித்ததில் பிடித்தது.
பைரூஸ்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -