மாகாண சபையிலிருந்து விலகி இருக்கப்போகின்றேன் - ரிஸ்வி ஜஹவர்ஷா

இக்பால் அலி-
டமேல் மாகாண சபையில் ஏனைய பாடசாலைகளுக்கு ஒதுக்கப்படுகின்ற வளப்பங்கீடுகள் நிதி ஒதுக்கீடுகள் இடம்பெறும் போதெல்லாம் குருநாகல் மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. என்னுடைய 13 வருட கால அரசியல் பயணத்திலே எமது சமூகம் சார்ந்த விடங்களுக்காக குரல் கொடுத்தோ போராட்டங்கள் நடத்தியோ அதிலே எந்தப் பயனையும் காணவில்லை. நாம் இதுவரையும் தோல்வி அடைந்தவர்களாக இருந்து கொண்டு இருக்கின்றோம். இந்தப் பயணம் தொடர வேண்டுமா எனவும் நாங்கள் யோசிக்க வேண்டி இருக்கிறது என்று வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜஹவர்ஷா தெரிவித்தார். 

குளிபாப்பிட்டிய கல்வி வலயத்திற்கு உட்பட்ட யகம்வெல முஸ்லிம் வித்தியாhயலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட வடமேல மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

இந்த வருடத்தில் பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை, வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் விஞ்ஞான ஆய்வு கூடம் போன்றவற்றை நிர்மாணிப்பதற்காக மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற நிதி 571 மில்லியன் ஆகும். அதேபோன்று உலக வங்கியின் நிதி உதவி ரூபா 221 மில்லியன் ஆகும். இந்த மொத்த நிதிதொடர்பாக வடமேல் மாகாண சபையில் பகிர்ந்தளிக்கும் விடயம் தொடர்பாக கதைக்கப்பட்டது. 

நாங்கள் தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் தொடர்பாக வளப்பற்றாக் குறை தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு ஆலோசனைகள் பரிந்துரைகள் செய்தோம். எவ்வளவு கதைத்தும் குருநாகல் மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் இரண்டுக்கு மட்டும்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை முன்னாள் முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர ஒதுக்கியிருந்தார். 

மல்லவப்பிட்டியிலுள்ள அல் ஹம்ரா முஸ்லிம் பாடசாலைக்கு ரூபா 15 இலட்சம் ரூபாவும் அதேபோன்று குருவிக்கொட்டுவ முஸ்லிம் பாடசாலைக்கு ரூபா 42 இலட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. 

குருநாகல் மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைக்கு கிடைக்கப் பெற்ற மிகச் சொற்பமான நிதி இவ்வளவுதான். நாங்கள் மாகாண சபையில் இருந்து கொண்டு இது தொடர்பாக தொடர்ந்து பேசிப் பேசி இருப்பதில் அர்த்தமில்லை எனவும் இந்த மாகாண சபையிலிருந்து விலகி இருப்பதுதான் இலகுவானது எனவும் கருத வேண்டி இருக்கிறது. 

இங்குள்ள பாடசாலைகளுக்கு நாங்கள் ஒவ்வொரு வருடமும் ஏதாவது நிகழ்வொன்றுக்காக நாங்கள் செல்கின்றோம். அப்பொழுது ஏதாவது ஒன்றைக் கேட்டு கோரிக்கை முன் வைப்பார்கள். நாங்கள் அதனை மாகாண சபையில் முன்வைப்போம். ஆனால் எவ்வகையான பிரதிபலனும் கிடைப்பதில்லை. 

எங்களுக்கு 25 இலட்சம் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதி மட்டும்தான் கிடைக்கின்றது. குருநாகல் மாவட்ட முழுவதிலும் உள்ள பாடசாலைகளுக்கோ, பாதைகளுக்கோ இன்னும் அடிப்படைத் தேயைவானவற்றுக்கோ இந்த சொற்ப தொகை நிதியை செலவு செய்ய வேண்டும். முடிந்தளவு எங்களால் இவ்வாறு செய்து கொண்டு செல்லுகின்றோம். 

கடந்த காலத்தில் ஆசியா அபிவிருத்தி வங்கியின் ஊடாக பாதையை அபிவிருத்தி செய்வதற்காக மாகாண சபை;க்கு நிதி கிடைக்கப்பெற்றது. இதற்காக ஆலோசனைகள் முன்வைத்தோம். ஒன்று கூட கிடைக்கவில்லை. 

குருநாகல் மாவட்டத்தில் 165 முஸ்லிம் கிராமங்களில் 83 தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் உள்ளன. சமூகப் பற்றுமிக்க கல்வி அதிகாரிகள் எல்லாக் கல்வி வலயங்களிலும் இருந்தால் எங்களுடைய கல்விப் பணிகள் மிகவும் இலகுவானதாக இருக்கும். 

கடந்த காலங்களில் எங்களால் இயன்றளவு ஒரு தனியான அரசியல் அதிகாரம் எங்களுடைய கையிலே இல்லாமல் எமது சமூகத்திற்கு எதையெல்லாம் செய்ய வேண்டும் என எதிர்பார்த்தோமோ பிரார்த்தனை செய்தோமோ அவற்றையெல்லாம் எதிர்காலத்தில் எந்த வகையில் வெற்றி கொள்ளலாம் என்ற வகையிலான தீர்மானத்தை எடுப்பதற்கு வழிகாட்டல் அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -