ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு..!

பழுலுல்லாஹ் பர்ஹான்-
ட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பொது மக்களுக்கு சுகாதார சேவையை வழங்கி வரும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு ரெயின்கோநிறுவனத்தினால் சுமார் 1500 ரூபா பெறுமதியான 50 நுளம்பு வலைகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

அன்பளிப்பு செய்யப்ட்ட மேற்படி நுளம்பு வலைகளை வைத்தியசாலை நிருவாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் 17-11-2015 இன்று செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாiயின் கேட்போர் கூடத்தில் மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்ச்சகரும், வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் தலைவருமான டாக்டர் எஸ்.எப்.அல்மீடா தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது ரெயின்கோ நிறுவனத்தின் பிரதிநிதிகளினால் 50 நுளம்பு வலைகள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை நிருவாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ரெயின்கோ நிறுவனத்தின் வட-கிழக்கு மத்திய மாகாண விற்பனை முகாமையாளர்களான எம்.பீ.எம்.சுல்பிக், எம்.றிஸ்வின், எம்.நஸான் ,கிழக்கு மாகாணரெயின்கோ விநியோகத்தர் எம்.அஃனப், வைத்திய கலாநிதி என்.சுசில், பல் வைத்தியர் திருமதி. சரூபா சமட், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் செயலாளர் ரீ.லக்சுமி காந்தன், உப செயலாளர் கே.சிவலிங்கம், பொருலாளர் எம்.தயாபுரமுரளி உட்பட அதன் உறுப்பினர்கள் , சிகரம் ஜூம்மா பள்ளிவாயல் முன்னாள் தலைவரும், வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் உறுப்பினருமான எம்.வை.ஆதம், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நுளம்பு வலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக நுளம்பு பெருக்கத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை நுளம்புகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக ரெயின்கோ நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -