பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகா விடுத்துள்ள அறிக்கை காரணமாக, தனக்கு மானபங்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, அவருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவன்காட் விவகாரத்தை, இலஞ்சம் பெற்று அது தொடர்புடைய உண்மைகளை மறைத்த்hர் என்று நேற்று வியாழக்கிழமை (05) சரத் பொன்சேகாவினால் விடுக்கப்பட்ட இந்த அறிக்கைக்கு, 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தொடரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போதும் தான் இதே அறிக்கை பற்றி கூறியிருந்ததாகவும் அவர் இவ்வாறு கூறியிருந்ததாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.