எப்.முபாரக்-
கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழில்நுட்பக்கல்வி, முன்பள்ளிக் கல்வி, விளையாட்டு பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு, மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினான் பண்பாட்டலூவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் தமிழ் இலக்கிய விழாவின் முதல் நாள் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(6) எழுத்தாளர் எஸ்.எம்.எம்.ஹனிபா தலைமையில் பண்பாட்டுப் பேரணி திருகோணமலை வலயக் கல்வி அலுவலக முன்றலில் ஆரம்பமாகி திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி விழா மண்டபத்தை சென்றடைந்தது. இப்பேரணியில் ஒவ்வொரு சமயங்களின் கலைகளை பிரதிபளிக்கும் வகையில் மேளதாளங்களுடன் ஊர்வலம் நடைபெற்றது.