றிசாத் பதியூதீன் பவுண்டேசனின் இலவச மாதிரி வினாத்தாள் வினியோகம் – 2015

எம்.வை.அமீர்-

இவ் வருடம் க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச மாதிரி வினாத் தாள்களை றிசாத் பதியூதீன் பவுண்டேசன் 2015.11.10ம் திகதி செவ்வாய்க் கிழமை மாலை 03.00 மணிக்கு சம்மாந்துறை விளையாட்டுக் கட்டடத் தொகுதியில் (Sports Complex) வைத்து குறித்த மாதிரி வினாத் தாள்களுக்கு விண்ணப்பித்த பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு உதவும் றிசாத் பதியூதீன் பவுண்டேசனின் இலவச மாதிரி வினாத் தாள்களை விநியோகிக்கும் நிகழ்வுக்கு தென் கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக உப வேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் அவர்கள் தலைமை வகிக்கவுள்ளதாக றிசாத் பதியூதீன் பவுண்டேசனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் றிஸ்டி சரீப் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -