கல்முனை மத்ரஸது தாருத் தவ்ஹீத் லிதஹ்பீழில் குர்ஆன் மத்ரஸாவிற்கு புதிய மாணவர் அனுமதி..!

எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலின் 'மத்ரஸது தாருத் தவ்ஹீத் லிதஹ்பீழில் குர்ஆன்'; மத்ரஸாவிற்கு பகுதி நேர ஹிப்ழு குர்ஆன் (மனன) கற்கை நெறிக்கு புதிய மாணவர்களுக்கான அனுமதிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுவதாக பள்ளிவாயல் நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அல்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்தவராகவும், பூரணமாக குர்ஆனை ஓதி முடித்தவராகவும் இருக்கின்ற 2015 ஆம் ஆண்டில் தரம் 5,6,7 இல் கல்வி பயிலும் மாணவர்களிடமிருந்து இக்கற்கை நெறிக்கு மேற்படி விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் கல்முனை-07, தைக்கா வீதியில் அமைந்துள்ள ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல் காரியாலயத்தில் அல்லது தாருத் தவ்ஹீத் இஸ்லாமிய நூலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று, எதிர்வரும் 26.11.2015 ஆம் திகதி வியாழக் கிழமை மாலை 6.30 மணிமுதல் இரவு 9 மணிவரை பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறும் விண்ணப்பதாரிகள் வேண்டப்படுகின்றனர்.

இக்கற்கை நெறிக்கான நேர்முகப்பரீட்சை நடைபெறும் திகதி 27.11.2015 மாலை 4 மணிமுதல் 6 மணி வரையுமாகும். ஏதிர்வரும் 2015.11.29 ஆம் திகதி மஹ்ரிப் முதல் இக்கற்கை நெறி ஆரம்பமாகவுள்ளதாகவும், குறிப்பிட்ட தொகையினரே சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் எனவும் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் மேலும் தெரிவித்தனர்.

இது விடயமான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள 077 6964632, 077 6178637, 077 6539000 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -