சுலக்சன் லோகராசு -
காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கே.ரொபின் கோடீஸ்வரன் உட்பட்ட பலர் இன்று 12ம் திகதி காரைதீவிற்கு களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
இந் நிகழ்வில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ருவன் சந்திர, பிரதி பணிப்பாளர் நாயகம் கொடமுன, பிரதம பொறியியாளர் ரணசிங்க, காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்இ விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள் அதிபர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் விளையாட்டு வீரர்கள் என பலரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
மேலும் விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களினாலும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்ற காரைதீவு கனகரட்ணம் விளையாட்டு மைதானத்தில் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டு அதற்கான தீர்வுகளாக அபிவிருத்திகளும் முன்வைக்கப்பட்ன.