நல்­லி­ணக்­கத்­திற்­காக ஒலித்த குரல் ஓய்ந்­து ­விட்­டது - மு.கா பிரதி தேசிய ஒருங்­கி­ணைப்­பாளர் ரஹ்மத் மன்சூர்

செய்தியாளர்-சபீக் ஹுசைன்
ருள் சூழ்ந்த யுகத்­தி­லி­ருந்து நாட்டை மீட்­டெ­டுத்து நல்­லி­ணக்­கத்­தினை ஏற்படுத்­து­வ­தற்­காக குரல்­கொ­டுத்த மாது­லு­வாவே சோபி­த­தேரரின் மறைவு அதிர்ச்­சி­யையும் ஆழ்ந்த கவலை­யையும் தோற்­று­வித்­துள்­ள­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதி தேசிய ஒருங்­கி­ணைப்­பாளர் ரஹ்மத் மன்சூர் தெரி­வித்­துள்ளார்.

மாதுலுவாவே சோபித தேரரின் மறைவு குறித்து ரஹ்மத் மன்சூர் வெளியிட்டுள்ள அனு­தாபச் செய்­தியில் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். 

அச்­செய்­திக்­கு­றிப்பில் ரஹ்மத் மன்சூர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

இந்த நாட்டில் ஆட்­சியை தக்­க­வைப்­ப­தற்­காக இன­வா­தத்தின் அடிப்­ப­டையில் தேசிய சகோ­த­ரத்­தவ இனங்­க­ளுக்­கி­டையில் பிரித்­தாளும் தந்­தி­ரத்தின் அடிப்­ப­டையில் காழ்ப்­பு­ணர்ச்­சிகள் உரு­வாக்­கப்­பட்டு விரி­சல்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

அவ்­வாறான நிலையில் கடந்த ஜன­வரி மாதம் எட்டாம் திகதி இந்த நாட்டில் ஜன­நா­யகச் சட்­டங்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து நல்­லாட்சி ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­காக மூவி­னங்­களின் தலை­வர்­க­ளையும் ஓர­ணிக்கு கொண்­டு­வந்த பெருமை இவ­ரையே சாரும். நாட்டில் காணப்­பட்ட இருண்ட யுகத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைத்து நல்­லாட்சி தோன்­று­வ­தற்கு ஆணி­வே­ராக இருந்தார்.

ஊழல் மோசடி, அதி­கார துஷ்­பி­ர­யோகம் என்­ப­வற்­றுக்கு எதி­ராக அழுத்­த­மான குர­லெ­ழுப்பி வந்­தவர்.

இனங்­க­ளுக்­கி­டையில் நிரந்­தர ஐக்­கியம் ஏற்­ப­டுத்­தப்பட்டு சுபீட்­ச­மான நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­ப­வேண்­டு­மென்­ப­தையே இலக்­காக கொண்­டி­ருந்தார்.

அச்­செ­யற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் அரும்­ப­ணி­களை முன்­னெ­டுத்­து­வந்த பெரு­மைக்­கு­ரி­ய­வரை இன்று நாம் இழந்து நிற்­கின்றோம். இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­திற்­காக ஓங்கி ஒலித்த குரல் இன்று ஓய்ந்து விட்­டது. அவ­ரு­டைய சேவை­களும், அர்ப்­ப­ணிப்­புக்­களும் எந்­வொரு இலங்­கை­யரின் மன­தி­லி­ருந்தும் நின்­ற­க­லா­த­வொன்­றா­கவே உள்­ளன. அவ­ரு­டைய மறைவு ஈடு­செய்­ய­மு­டி­யாத இழப்­பா­க­வி­ருக்­கின்­றது. 

அவ­ரு­டைய கன­வுகள் நன­வாக்­கப்­ப­ட­வேண்டும். அவ­ரு­டைய இலக்குகளை அடைவதற்காக அனைத்து தலைவர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அதுவே அவருடைய ஆன்மாவின் சாந்திக்காக நாம் செய்யவேண்டிய கடமையாகின்றது. அதனை மனதில் நிலைநிறுத்தி எமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனைவரும் கைகோர்க்கவேண்டிய தருணம் இதுவாகும். இவ்வாறு ரஹ்மத் மன்சூர் தெரி­வித்­துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -