திட்டமிடல் இல்லாமல் மேற்கொள்ளும் அபிவிருத்திகள் யாவும் மக்களுக்கு ஆபத்தானது - அமைச்சர் நஸீர்

அபுஅலா - 
ட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகளில் அமைக்கப்பட்ட வடிகாண்களில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான சகல முன்னேற்பாடுகளையும் அட்டாளைச்சேனை பிரதேச சபையினரும், பிரதேச செயலகமும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் வெள்ள அனர்த்தம் வருமுன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்று பிற்பகல் (20) அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகான்கள் உரிய முறையில் திட்டமிட்டு நிர்மாணிக்கப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்த பிரதான வடிகான்கள் முதலில் சீர் செய்யப்படவேண்டும். இதனை சீர் செய்யாத வரை உள்ளக வீதிகளில் அமைக்கப்படுள்ள வடிகான்களிலிருந்து மழை நீர் வடிந்தோடுவதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொண்டாலும் அது பயன் தரப்போவதில்லை.

அதற்கான நடவடிக்கைகளை அட்டாளைச்சேனை பிரதேச சபையினரும், பிரதேச செயலகமும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். மழை நீர் தேங்கி நிற்பதால் வெள்ள அபாயம் மட்டும்தான் நமக்கு ஏற்படும் என்று யாரும் நினைக்கக்கூடாது. அதனால் பல சுகாதார சீர் கேடுகளும் டெங்கு நுளம்பு பெருகும் அபாயமும் காணப்படுகின்றது.

இதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புத் தன்மை இன்மை போன்ற அசமந்தமான போக்கே இதற்கு காரணம் என்றுதான் சொல்லலாம். அரசியல்வாதிகளினால் கொண்டுவரும் தீர்மானங்களை விரைவாகவும் முறையாகவும் அமுல்படுத்துவதற்கு அதிகாரிகள் பூரணமாக ஒத்துழைப்புக்கள் வழங்கி செயற்படுவது மிக அவசியமாகும்.

அரசியல்வாதிகளால் அபிவிருத்திக்கென பணங்களை கொண்டுவரலாம். அதனை சரியாக திட்டமிட்டு பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத முறையில் அமுல்படுத்துவது அதிகாரிகளின் கடமையாகும் என்றார்.

இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதூமாலெப்பை, சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் யூ.எம்.வாஹிட், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய நிறைவெற்று பொறியியலாளர் கே.எல்.எம்.இஸ்மாயில், பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -