லக்சல நிறுவனத்தின் புதிய தலைவராக வீ.சி இஸ்மாயில்..!

அஸ்ரப் ஏ சமத்-
லங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின் உல்லாச பயணத்துறையினருக்கு ஒர் பாரிய உல்லாச மையாக இலங்கை விளங்குகின்றது. இலங்கைக்கு வரும் ஒவ்வொரு உல்லாசப் பிரயாணிகள் நமது நாட்டு கிரமிய பாரம்பரிய கைப்பணி உற்பத்திகளை லக்சலவின் கொள்முதல் செய்து உலகுக்கு எடுத்துச் சொல்கின்றனா். 

இந் நிறுவனம் கொழும்பில் தும்முல்ல, பராளுமன்றத்திற்கு அருகில் அபேகம, போட், கட்டுபத்தை, ரேஸ் கோஸ், மீயுசியம், கண்டி, காலி, நுவரெலியா, கட்டுநாயக்க விமான நிலையம், வெலிப்பன்னை ஆகிய பிரதேசங்களில் இந் நிறுவனம் இயங்குகின்றன. 

இதனால் இலங்கையில் கிராமங்களில் வாழும் 1000 குடும்பங்கள் தமது உற்பத்திகளை லக்சலவுக்கு வழங்கி அவா் நேரடியாக ஆதாயம் பெறுகின்றனா். இந் நிறுவனம் இவ் ஆண்டு 24 மில்லியன் ருபா வருமாணத்தைப் பெற்று ஒரு இலாபமீட்டும் நிறுவனமாக விளங்குகின்றது. இங்கு 194 ஊழியாகள் சேவையாற்றுகின்றனா்.

லக்சல நிறுவனத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 10 வருடம் உபவேந்தராக கடமையாற்றிய காலநிதி இஸ்மாயில் அவா்களை புதிய தலைவராக நியமித்துள்ளேன். அவா் கடந்த பொதுத்தோ்தலில் எனது கட்சியில் போட்டியிட்டு அரசியலில் ஈடுபட்டாா். 

அவரது நிறுவாகத்தின் கீழ் இந் நிறுவனம் மேலும் முன்னேற வேண்டும்.அதற்காக சகல ஊழியா்களும் ஒத்துழைப்பு வழங்கள் வேண்டும். எதிா்காலத்தில் சீனா இலங்கையில் நிறுவும் சங்கை உல்லாச கோட்டல்கள் உருவாகும்போது லக்சல நிறுவனமும் மேலும் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். இதன் முலம் எமது நாட்டுக்கு அன்நிய நாட்டுச் செலாவானியை லக்சல ஈட்டி கிராமிய மட்டத்தில் தமது உற்பத்திகளுக்கு புத்துயிா் அளித்தல் வேண்டும். 

அத்துடன் மருதமுனை மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலும் கைப்பணி உற்பத்திகள், கைத்தரி சாரண்கள், பிடவைகள், வெற்றிக் துணிகள் கொள்முதல் செய்யப்படல் வேண்டும். இவற்றுக்காக நேற்று அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் ஆராய்ந்தேன். 

அதற்காக ஆர்.டி.பி வங்கி ஊடாக கடனைப் பெறுவதற்காக இலங்கை மத்திய வங்கித் தலைவரும் பேசியுள்ளதாகவும் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் அங்கு உரையாற்றினாா்.

கைத்தொழில் வா்த்தக அமைச்சா் றிசாத் பதியுத்தீன் அமைசினால் தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனமான லக்சல வின் புதிய தலைவராக தென்கிழக்கு பல்கலைக்கழகததில் உபவேந்தராக கடமையாற்றிய காலாநிதி எம். இஸ்மாயில் நியமிக்கப்பட்டாா். 

இவா் இன்று கொழும்பு -7 தும்முல்லையில் உள்ள லக்சல தலைமையகத்தில் வைத்து தமது கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாா். இந் நிகழ்வில் , பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ் அமீா் அலி, மாகாண சபை உறுப்பிணா் ரீ.ஏ அமீா், முன்னாள் மாகாண சபை உறுப்பினா் ஜெமீல், எஸ்.எஸ்.பி மஜீத் மற்றும் கட்சி ஆதரவாலாளா்களும் கலந்து கொண்டனா்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -