அரசங்கத்திற்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு மன்னிப்பு -தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் மன்னிப்பு இல்லை? யோகேஸ்வரன்

ந.குகதர்சன்-

டந்த காலங்களில் அரசாங்கத்துக்கெதிராக செயற்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்ய முடியுமானால் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன்? பொதுமன்னிப்பு வழங்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வினா எழுப்பியுள்ளார்.
 
மட்டக்களப்பு பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
 
பாடசாலை அதிபர் வயிரமுத்து நல்லதம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக ஞானமுத்து ஸ்ரீநேசன், சதாசிவம் வியாழேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், கோட்டகல்வி அதிகாரி எஸ்.முருகேசுப்பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
'படுவான்கரைப் பிரதேசம் கல்வியிலும் வாழ்வாதாரத்திலும் மிக பின்தங்கி காணப்படுகிறது. இந்த பிரதேசங்களை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என தற்போது ஆராய்ந்து கொண்டிருகிறோம்.
 
தமிழ் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகத் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை வழங்குவதாக தொடர்ந்தும் ஏமாற்றி வந்த காரணத்தினால் சிறுபாண்மை மக்கள் இணைந்து அவரை தோற்கடித்தார்கள்.
 
சிறுபாண்மை மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு விசுவாசமாகச் செயற்பட வேண்டும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் போது அது தொடர்பாக பேசுவதற்கு எங்களால் முடியாது ஆனால் ஜனாதிபதியால் பொது மனிப்பு வழங்கக் கூடிய அதிகாரம் உண்டு அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.
 
இந்த நாட்டில் கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கெதிராக செயற்பட்;ட பலருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட வரலாறு உள்ளது. ராஜீப் காந்தியை துப்பாக்கியால் அடிக்க முற்பட்ட கடற்படை சிற்பாய்க்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜேவிபியினருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் போராட்ட இயக்கங்களாக செயற்பட்டவர்கள்; அரசியலில் இணைப்பட்டு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கெல்லாம் பொதுமன்னிப்பு வழங்க முடியுமானால் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்க முடியாது.  
 
ஜனாதிபதி நினைத்தால் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியும் சிறுபாண்மை மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட உங்களுக்கு தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. அது உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு செய்கின்ற கைமாறாக அமையும்' என்றார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -