எப்.முபாரக்-
கந்தளாய் பேராறு பொது விளையாட்டு மைதானத்தில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை செவ்வாய் கிழமை (17)இரவு கைது செய்துள்ளதாக கந்தளாய்பொலிஸார் தெரிவிக்கின்றார்கள்.
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பொது விளையாட்டு மைதானத்தில் கஞ்சா புகைப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸார் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த சமயம் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் இவ்வாறு தினமும் அப்பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் கஞ்சா புகைப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 23மற்றும் 26வயதுடைய இரண்டு சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் இன்று புதன்கிழமை (18) கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
