நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று..!

கூட்டரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2016 வரவுசெலவுத்திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 3,138 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ள தோடு அரச வருமானம் 1,941 பில்லியன்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

துண்டு விழும் தொகையை 6.8 வீதமாக மட்டுப்படுத்தவும், 2017ல் இதனை 6.2 வீதமாகவும் 2020ல் 3.2 ஆகவும் குறைக்க அரசாங்கம் உத்திதேசித்துள்ளது. இம்முறை வரவுசெலவுத்திட்டம் 2016 – 2018 இடைக்காலத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய உள்ளதோடு இதில் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களுக்கு வழமையைவிட கூடுதல் நிதி ஒதுக்கப்பட் டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சிற்கு 306.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு கல்வி அமைச்சிற்கு 185.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2015 நிதி ஒதுக்கீட்டைவிட 4 மடங்கு அதிகமாகும்.

சுகாதார அமைச்சிற்கு 3174 பில்லியன் ரூபாவும், பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சிற்கு 171 பில்லியன் ரூபாவும் நிதி திட்டமிடல் அமைச்சிற்கு 107 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட் டுள்ளது.

வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் ஆரம்பமாகிறது.

நாளை ஆரம்பிக்கும் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 2ஆம் திகதிவரை நடைபெற்று டிசம்பர் 2ஆம் திகதி விவாதம் நடத்தப்படும்.

பின்னர் மூன்றாம் திகதி முதல் 19ஆம் திகதிவரை குழுநிலை விவாதம் நடைபெற்று 19ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -