அடுத்த வருடத்துக்காக புதிய அரசாங்கத்தினால் நாளை முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பிலான இறுதி நோக்கு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இட ம்பெற்றுள்ளது.
2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பில், இன்றைய சந்திப்பின் போது கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் நாளை நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன.
இன்றைய கலந்துரையாடலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அபிவிருத்தி வழிமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரம, மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன், நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
