ஜெம்சாத் இக்பால்-
நீர்ப்பாசனம் மற்றும் நீர் விநியோகம், மேனராகலை நீர்விநியேகத்திட்டத்தின் முதலாம் கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆராயும் கலந்துரையாடலொன்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் சனிக்கிழமை (24) மாலை அமைச்சின் கேட்போர் கூடத்தில் முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.
ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீர் வழங்கல் சம்பந்தமான திட்டங்கள் பற்றி இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
சீ.கே.டீ பிரதேசத்தில் மோனராகலை, விவிலை, ஒக்கன்பிட்டிய மற்றும் கம்பேகம பல பிரதேசங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கலந்துரையாடல்கள் தனித்தனியான இதன்போது இடம்பெற்றன.
உன்னிச்சை தமிழ் கிராமங்களுக்கான குடிநீர் விநியோகம் பற்றியும் ஆராயப்பட்டது. பெரும்பாலான விடயங்கள் நீர் விநியோக அமைச்சின் கீழ் வருவதனால் அவற்றை தொகுத்து உத்தியோகபூர்வ கடிதமொன்றை நீர் விநியோக அமைச்சருக்கு அனுப்பிவைக்குமாறு அமைச்சர் ஹக்கீம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
நவம்பர் 20ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து வேலைத்திட்டங்களுக்குமான நிதியினை பெற்றுக் கொடுக்குமாறு அவர் உயரதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இவ்வருட இறுதிக்குள் சகல வேலைத்திட்டங்களையும் நிறைவடையச் செய்ய வேண்டுமெனவும், மீதியாகவுள்ள நிதியினை தேவையான வேறு இடங்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு அனைத்து அதிகாரிகளும் முன்வர வேண்டும் என்றார்.
இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான விஜய விஜயமுனி சொய்சா, ரஞ்சித் மத்து பாண்டார, பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிங்க, அமைச்சின் செயலாளர் பீ.பி.எம்.யூ.பஸ்நாயக்கா, மேலதிகச் செயலாளர் சரத் சந்திர வித்தாரன, தேசிய நீர் வங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவர் பொறியியலாளர் கே.ஏ.அன்சார் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் உட்பட உயரதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.






