ஜு னைட்.எம்.பஹ்த்-
மாதாந்த விஷேட சொற்பொழிவு இலங்கை
ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்தம் இடம்பெறும் விஷேட சொற்பொழிவுத் தொடரில் நவம்பர் மாதத்துக்கான சொற்பொழிவு எதிர்வரும் 3ம் திகதி செவ்வாய் கிழமை மாலை 6.45 மணிக்கு ‘பலஸ்தீன் ஓர் மனித நேயப்பிரச்சினை’ எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளது.
இலக்கம் 77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறும் இவ்விஷேட சொற்பொழிவை, சர்வதேச விவகாரங்கள் பற்றிய எழுத்தாளரும், இஸ்லாஹிய்யா அறபுக்கல்லூரி விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் ஸகி பவ்ஸ் (நளீமி) அவர்கள் நிகழ்த்தவுள்ளார். ஸியோனிஸம், ஒரு யூத மத செயற்றிட்டமல்ல!,
ஜெருஸலத்திற்கும் ஸியோனிஸத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன?,
ஜெருஸலம் 2020 திட்டம், மிக நீண்ட இனவாத சுவரின் நோக்கம் , போன்ற இன்னோரன்ன உப தலைப்புக்களில் அரிய பல தகவல்களை அறிந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புகளுக்கு: 0766 529128
