கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற செயலமர்வு..!

எ.எல்.எம்.சினாஸ்-
விவசாய அபிவிருத்தித் திணைக்களம் ருNனுP நிறுவனத்துடன் இணைந்து அரச உத்தியோகத்தர்களுக்கு நடாத்திய செயலமர்வு கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தில் (02.11.2015) நடைபெற்றது. 

மாவட்டத்தில் விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இதன்போது ஆராயப்பட்டது. கலந்துகொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் இதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டது.

நாட்டின் விவசாயத்துறையை முன்னோக்கிக் கொண்டுசெல்வதில் விவசாய திணைக்களம் பாரிய பங்களிப்பை செய்து வருகின்றது. அதேபோன்று கிராம மட்டங்களில் பணியாற்றிவரும் அரச உத்தியோகத்தர்களும் அர்பனிப்புடன் சேவையாற்றிவருகின்றனர். குறித்த பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் இந்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த செயலமர்வில் கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைகுடியிருப்பு, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் ஐந்து ஆண்டு காலத்துக்கு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செயல்முறைமையிலான அட்டவணை வகுக்கப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் உதவிப் பொருளியலாளர் குமுது ரெட்நாயக்க, விவசாய போதனசிரியர்களான ஆர்.ராதிக்கா, ரீ.செந்தூரன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -