அஸ்ஹர் இப்றாஹிம்-
66 வது அகவையில் காலடியெடுத்து வைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஸ்தாபகர் தினம் இன்று ( 16 ) கல்லூரி பிரதி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியின் ஸ்தாபகர் கேட் முதலியார் மர்ஹும் எம்.எஸ்.காரியப்பர் அவர்களின் பேரன் டாக்டர் அர்ஸத் காரியப்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்துடன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மர்ஹும் எம்.எஸ்.காரியப்பர் பற்றி உரையாற்றியதுடன் கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்டொன்றினை நாட்டி வைத்தார்.
இதன் போது கல்லூரியின் உதவி அதிபர்களான ஏ.பி.முஜீன் , எம்.எச்.எம்.அபுபக்கர் , எம்.எஸ்.அலிகான் , எம்.ஐ.எம்.அஸ்மி , அன்வர் அலி , பகுதித்தலைவர் ஏ.ஆர்.எம்.யுசுப் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

