நாங்கள் 20 வது வரவு செலவு திட்டத்தை முன்வைக்கவுள்ளோம்-நளீன் பண்டார

இக்பால் அலி -
நாங்கள் 20 வது வரவு செலவு திட்டத்தை முன்வைக்கவுள்ளோம். 18 கோடி கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். கடந்த கால ஆட்சியாளர்கள் 2013, 2014 ஆகிய ஆகிய ஆண்டுகளில் அதாவது 2015 ஆம் ஆண்டு வரை ஆறு கோடியே கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்கள். 

இவ்வருடம் 18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மூன்று மடங்கு அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கூடுதலான கவனம் எமது பிரதமரும் எமது கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காசியவம் ஆகியோர் செலுத்தியுள்ளனர் என்று குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினரும் பிங்கிரிய தேர்தல் தொகுதி ஐ.தே.கட்சி அமைப்பாளருமான நளீன் பண்டார தெரிவித்தார்.

குளிபாப்பிட்டிய கல்வி வலயத்திற்கு உட்பட்ட யகம்வெல முஸ்லிம் வித்தியாhயலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை மண்டபத்தில் 15-11-2015 நடைபெற்றது. 

அதிபர் அஷ்ஷெ;ய்க் ஏ. எல். எம். அஷ்ரப்கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினரும் பிங்கிரிய தேர்தல் தொகுதி ஐ. தே. கட்சி அமைப்பாளருமான நளீன் பண்டார அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

இதில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா, குளியாப்பிட்டிய கல்வி வலய தமிழ் மொழிப் பிரிவுக்கான உதவி பணிப்பாளர் எம். ஏ. ஜீ. அஷ்ரப், சபீயா பவுன்டேசன் அமைப்பின் தலைவர் சாபீர் மன்சூர். சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அஷ்ஷெய்க் உவைஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

கடந்த ஆட்சியில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் படி எட்டு ஒன்பது பத்தாம் இடங்களிலேயாகும். இம்முறை சுகாதாரம், பாதுகாப்பு ஆகிய துறைக்கு மூன்றாம் நிலையே உள்ளன. இதனைப் பார்க்கும் போது கல்விக்காக ஒதுக்கீடு அதிகளவு மேற் கொள்ளபப்ட்டுள்ளது. 

அத்துடன் பிங்கிரிய தேர்தல் தொகுதி அபிவிருத்தி செயற் திட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டுக்குள் பாடசாலைகளிலே காணப்படும் அடிப்படையான அனைத்து வளப்பாற்றாக் குறைகளையும் நிவர்த்தி செய்து வருதாக கல்வி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இப்பாடசாலையில் உள்ள அனைத்து குiறாபாடுகளும் நிவர்த்தி செய்யப்படும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன் 

இப்பாடசாலை 84 ஆண்டு வருட நீண்ட வரலாற்றைக் கொண்ட பாடசாலை. இந்த பகுதியில் வாழும் அனைத்துப் பெற்றோர்களுடைய பிள்ளைச் செல்வங்களுக்கு கல்வியை வழங்கக் கூடிய பாடசாலையாகும். ஆயினும் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளைக்கு மத்தியில் தான் இந்தப் பாடசாலையை முன்னெடுத்துச் செல்ல நேர்ந்துள்ளது. இந்த நிலைக்கான முக்கிய காரணம் இந்தப் பகுதியிலுள்ளவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்தினால் பாடசாலைகளுக்கு கிடைக்கப்பட வேண்டிய வளங்கள் நிடைக்கப்பெறவில்லை எனக் கருதுகின்றேன்.

மில்லியன் 500 முதல் மில்லியன் 800 வரை மாகாண சபையின் கல்விக்காகச் செலவிடப்படுகிறது. இந்த மாவட்டத்தை எடுத்துக் கொண்டாலும் சரி மாகாணத்தை எடுத்துச் கொண்டாலும் சரி இந்த 800 மில்லியன் நிதியில் 6 மில்லியன் அளவில் தான் முன்னாள் முதல் அமைச்சர் இரு தமிழ் மொழி மூலப் பாடசாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கடந்த காலங்களில் உங்களுக்கு அநிhயாம் இழைக்கப்பட்டுள்ளது என இதிலிலிருந்து தெளிவாகவே விளங்குகின்றது. 

இந்தப் பாடசாலையின் வரலாற்றில் இங்கு காணப்படும் கட்டிடங்கள் இரண்டும் கடந்த ஐக்கிய தேசியக் கட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவையாகும். இனி வரும் காலங்களில் இந்தப் பாடசாலையில் கட்டடிடங்கள் நிர்மாணிக்கப்பட இருப்பது ஐக்கிய தேசியக் கட்சிக் காலத்திலேதான் ஆகும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன். என்று அவர் மேலும் தெரிவித்தார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -