க்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நடிகர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு அணியை உருவாக்கி போட்டியிட்டோம். எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் மூத்த கலைஞர்கள் சக்கர நாற்காலியில் இயலாத நிலையிலும் உற்சாகத்துடன் வந்து வாக்களித்தனர். அவர்களில் நான் பலபேரை பார்த்தது கூட இல்லை. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக செயல்படுவோம்.
நாசர் பேட்டி: சொல்ல முடியாத நெகிழ்ச்சியான உணர்வில் இருக்கிறோம். யாரையும் தோற்கடிக்க நடந்ததல்ல இந்த நிகழ்வு. ஒரு மாற்றம் வரவேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது. மூத்த கலைஞர்களின் அனுபவமும் இளைஞர்களின் ஒற்றுமையும் சேர்ந்து வேறு ஒரு திசை நோக்கி பயணிக்க உள்ளோம். நாங்கள் ஒரு புதிய மாற்றத்தை நோக்கி செல்வோம்.
முதலில் மாபெரும் திருவிழாவை நடத்திய, வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
திடீர் சவால் இது. 4 பேர் சேர்ந்து ஆரம்பித்து இவ்வளவு பெரிய நிகழ்வாக செய்துள்ளோம். சங்கத்தை சிறப்பாக வழிநடத்துவோம். நாங்கள் ஒன்றாக இருப்போம். நானும் சரத்தும் உளமாற கட்டிப்பிடித்து எங்கள் உணர்வுகளை பரிமாறி கொண்டோம். சரத்குமாரின் ஒத்துழைப்பை கேட்டுள்ளேன். அவரும் ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளார். நான் சோர்ந்திருந்த போதெல்லாம் உற்சாகமூட்டி, எங்கள் குழுவின் போர்வாளாக திகழ்ந்த விஷாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
அனைத்து பொறுப்புகளையும் கைப்பற்றிய விஷால் அணி: தலைவர் பொது செயலாளர் பொருளாளர் தவிர மற்ற பொறுப்புகளையும் விஷால் அணியினர் கைப்பற்றினர். துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஜயகுமாரை, 247 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கருணாஸ் பெற்ற வாக்குகள் 1,362. விஜயகுமார் பெற்ற வாக்குகள் 1,115. மற்றொரு புறம் ஆரம்பம் முதல் முன்னிலையில் இருந்த சரத்குமார் அணியை சேர்ந்த சிம்பு, இறுதியில் பொன்வண்ணனிடம் 128 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்று போனார். பொன்வண்ணன் பெற்ற வாக்குகள் 1,235. சிம்பு பெற்ற வாக்குகள் 1,107. இதன்மூலம் நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளை விஷால் அணியினர் கைப்பற்றினர். செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது.