திருமணத்தின் பின்னர், தன் முன்னாள் காதலனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் வெளியானதால் இளம் மனைவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று திசோகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
திருமணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் காதலனுடன் எடுத்த புகைப்படம் ஒரு மாதத்திற்கு முன்னர் (திருமணமான பின்னர்) பேஸ்புக்கில் வெளியானதை தொடர்ந்து அவமானம் தாங்காமலே குறிப்பிட்ட 25 வயது யுவதி சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த அனுஷா மதுவந்தி என்ற பெண்நே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அவரின் சடலம் வைக்கபட்டு மரண விசாரணை நடைபெறுவதாகவும் யுவதியின் அண்ணன் தெரிவித்துள்ளார்.
தனக்கு சில தினங்களுக்கு முன்னர் தங்கையின் முன்னாள் காதல் விவகாரம் தெரிய வந்ததுடன், அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தவர் தற்போது தங்கையை பிளாக் மெயில் செய்து வந்துள்ளதாகவும், சுஜித் சாகர எனப்படும் அந்த நபர் அப்படத்தை பேஸ்புக்கில் போட்டு இருந்ததை தான் கண்டதாவும், பின்னர் தங்கையும் அதை காண நேரிட்டதவும், பின்னர் குடும்பத்தினர் சென்று பிங்கிரிய போலீசில் முறைப்பாடு ஒன்றை மேட்கொண்டதவும், பின்னர் தங்கை மாமாவின் வீட்டில் தங்க வைக்கட்டபோதே நேற்று கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்த தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.