கொண்டயாவின் மரபணு பொருந்தவில்லை...!

சேயா கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டயா என்பவரின் மரபணு பொருந்தவில்லை.

சேயாவின் சடலத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மரபணுவிற்கும், கொண்டயாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மரபணுவிற்கும் இடையில் தொடர்பில்லை என புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலையை கொண்டாவின் சகோதரர் மேற்கொண்டதாக புலனாய்வு பிரிவினர் அண்மையில் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.

இதன் அடிப்படையில் கொண்டயாவின் சகோதரரின் மரபணுவும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

கொண்டயா மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை எதிர்வரும் 19ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவரும் மற்றுமொரு நபரும் குற்றமற்றவர்கள் என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -