விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘புலி’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்பார்த்த மாதிரியே இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படி இருப்பதாக திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், ‘புலி’ படத்தை பார்த்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘புலி’ படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி. படத்தில் வரும் பிரம்மாண்ட செட்டுகள் என்னை ரசிக்க வைத்தது. படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தன.
படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்த புலி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது. விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருந்தது.
ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்த படம் இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லிங்காக இருந்தது. குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள படம் குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் புலி. ஹேட்ஸ் ஆப் த புலி டீம் (Hats Off to the Puli Team) என்று பாராட்டினார்.
