தேசிய காங்கிரஸ் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதியுடன் இணையும் - சபீஸ்

சப்ரின்-
தேசிய காங்கிரஸ் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதியுடன் இணைந்தே போட்டி இடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்படி தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில் -

வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் தேசிய காங்கிரஸ், சில முஸ்லிம் கட்சிகளோடு சேர்ந்து போட்டி இடும் எனும் செய்தி முற்றிலும் வதந்தி ஆகும். மு. கா அம்பாறைக்கு வழங்கிய பிரதி அமைச்சுக்கள் விரும்பிப் பெற்றவைகள் கிடையாது . அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை கல்முனை மற்றும் அக்கரைப்பற்றில் ஆதார வைத்தியசாலைகள் இருக்கும் போது புதிதாக என்ன செய்ய முடியும் 10 நியமனங்கள் கொடுத்து பணம் வாங்க முடியும். 

சனத் ஜயசூரிய போன்றவர்கள் வகிக்கும் பிரதி விளையாட்டு அமைச்சினைப் பெற்றுக் கொண்டு நமது சமூகத்திற்கு வேலை செய்திட முடியுமா? அதே போன்று 46 நிறுவனங்களைக் கொண்டு வழங்கப்பட்ட வர்த்தக அமைச்சு இப்போது 32 நிறுவனங்களோடு குறைத்து ரிசாட் பதுதீனுக்கு வழங்கப் பட்டுள்ளது. இவர்களே அரசாங்கத்திடம் பிச்சை வேண்டி நிற்க்கும் போது தேசிய காங்கிரஸ் இவர்களுடன் கூட்டுச் சேராது .

ஏனென்றால் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு பலர் அதாஉல்லாவிடம் கேட்டபோது பிரபாகரனே ஜனாதிபதியுடன் தீர்வு தாருங்கள் என்று கேட்கும் போது நாம் ஏன் பிரபாகரனிடம் பிச்சை கேட்டக வேண்டும் எனக் கூறியவர் எம் தலைவர். 

வீழ்ந்தவன் எழுந்து நின்றது கிடையாது என்பது சரித்திரத்தில் கிடையாது வருகின்ற தேர்தலில் ஜனாதிபதியுடனே தேசிய காங்கிரஸ் கூட்டுச் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.

அவ்வாறு நடைபெற்றால் அக்கரைப்பற்றில் தனித்தும் மற்றைய பிரதேசங்களில் பொதுச் சின்னத்திலும் போட்டி இடுவது பற்றி பின்னர் தீர்மானிக்கப் படும் என மேலும் கூறினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -