ஆசிரியர் யாகூப் பிரதீபா பிரபா விருது பெற்றார்..!

சுலைமான் றாபி-
ல்வியமைச்சினால் வருடா வருடம் நடாத்தப்படும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களைக் கௌரவிக்கும் விழாவான பிரதீபா பிரபா விருதில் நிந்தவூர் கமு/கமு/அல் மஸ்லம் வித்தியாலயத்தினைச்சேர்ந்த மீராலெப்பை யாகூப் ஆசிரியர் கல்முனை கல்வி மாவட்ட பாடசாலை, கோட்டம், மற்றும் வலய மட்டங்களில் தெரிவு செய்யப்பட்டு ஆசிரியர் தினமான நேற்று (06) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதீபா பிரபா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

25 வருட ஆசிரியர் சேவை மூப்பினைக் கொண்ட இவ்வாசிரியர் பாடசாலைக்காலங்களில் விடுமுறைகளை மேற்கொள்ளாது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் மிகப்பெரிய பங்கினை ஆற்றியதோடு, இப்பாடசாலையின் பல்வேறு ஆற்றல்களை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -