சடலத்தை வைத்து வீதிக்காக ஆர்ப்பாட்டம்...!

க.கிஷாந்தன்-
டுல்சீமை பிளான்டேஷன் கம்பனி நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும் 30 வருடம் பழமைவாய்ந்த பொலந்தலாவ கிலானி தோட்டத்தின் பாதையை உடனடியாக சீர்திருத்தும் படியும் இதில் ஏற்படும் உயிராபத்துக்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என இவ்வீதியில் 06.10.2015 அன்று உயிரிழந்த நபரின் சடலத்தை வைத்து தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொவந்தலாவ கிலானி தோட்டத்தில் தோட்ட தொழிலாளலர்கள் மற்றும் இதில் உள்ளிட்ட மேலும் நான்கு டிவிசன்களை சேர்ந்த தொழிலாளர்களின் பாவனைக்குள்ளான 2 கிலோ மீற்றர் பிரதான வீதி கடந்த சுமார் 30 வருட காலமாக குன்றும் குழியுமாக பிரயாணம் செய்ய முடியாத அளவில் காணப்படுவதால் இப்பகுதி தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

பலமுறை பல்வேறுப்பட்ட அரசியல் நபர்கள், தோட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு இப்பாதையை சீர்திருத்தி தரும்படி பல்வேறுப்பட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இருந்தும் ஒரு சில வேலைகளில் சில பாதையை சீர்திருத்த பொருட்களை இறக்கியும் முழுமையாக இப்பாதை சீர்திருத்தப்படாமல் காணப்படுகின்றது.

அதேவேளை 06.10.2015 அன்று இரவு 7 மணியளவில் கிலானி தோட்டத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளி ஒருவர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் அவசரமாக சீர்திருத்தப்படாத இந்த பாதை வழியே பொகவந்தலாவை நகரில் உள்ள வைத்தியசாலைக்கு முச்சக்கரவண்டியில் கொண்டு செல்லும் வேளையில் இடையில் இவர் உயிரிழந்துள்ளார். இவரின் உயிரிழப்புக்கு இந்த பாதையே காரணம் என தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்படைந்துள்ளனர்.

எனவே உயிரிழந்த இஸ்லாமியரான சரிப்டீன் என்பவரின் மரணமே இப்பாதையில் இடம்பெறும் மரணமே கடைசி மரணமாக கருத்திற் கொண்டு இத்தோட்டத்தை சேர்ந்த 350ற்கும் மேலான தோட்ட தொழிலாளர்களில் 100 பேர் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

07.10.2015 அன்று பிற்பகல் நடத்தப்பட்ட இந்த போராட்டம் பொகவந்தலாவ கிலானி தோட்டத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை வைத்து இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கையை மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.

மேற்படி 2 கிலோ மீற்றர் கொண்ட இந்த பிரதான வீதியில் கிலானி தோட்டத்துக்குட்பட்ட தெரேசியா, மோரா, சிங்காரவத்தை, டம்பார போன்ற பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அவசரமாக செல்லும் நோயாளிகள் அணைவரும் பிரயாணிக்கும் இப்பாதையை உடனடியாக சம்மந்தப்பட்டவர்கள் தலையீட்டு சீர்திருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -