சபீக் ஹுசைன்-
முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் எதிர்வரும் வியாழக்கிழமை 22 ஆம் திகதி மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து விசேட பயான் நிகழ்ச்சி ஜாமியா நளீமியா விரிவுரையாளர் அஷ்ஷேய்க் பளீல் நளீமி அவர்களினால் நிகழ்த்தப்படவுள்ளது.
மாதத்தின் முதல் வாரம் மற்றும் நான்காம் வாரம் என தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பயான் நிகழ்ச்சி தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. அந்த வகையில் இம்மாதத்தின் இரண்டாம் நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இன்ஷா அல்லாஹ்.
இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்வதோடு, முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெண்களுக்கான பிரத்தியேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.