நல்லாட்சியில் தோட்ட தொழிலாளர்கள் காக்கப்படுவார்கள் - அமைச்சர் நவீன் திஸாநாயக்க

க.கிஷாந்தன்-
ல்லாட்சி அரசாங்கத்தில் சிறு மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் காக்கப்படுவார்கள். இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்களின் ஊடாக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக பெருந்தோட்ட கைதொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

18.10.2015 அன்று அட்டன் நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,

இன்று உலக சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சி தந்துள்ள நிலையில் மலையக பெருந்தோட்ட சிறு தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனை நிவர்த்திக்க இந்த அரசாங்கம் முனைப்புடன் செயல்பட நான் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடமும் கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளேன்.

இதற்கு இனங்க வெகுவிரைவில் இம்மக்களின் நலன்களை பேண நான் அயராது சேவையை முன்னெடுப்பேன்.

கிராம, தோட்ட பகுதிகள் மற்றும் நகர பகுதிகளில் எதிர்காலத்தில் நடாத்தப்படும் அபிவிருத்தி முன்னெடுப்புகளை ஓர் சங்கம் கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை ஆய்வு செய்து தீர்க்கமாக அபிவிருத்தியினை முன்னெடுப்பதே எனது முக்கிய சேவையாகும்.

நமது நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக ஆட்சி செய்த ராஜபக்ஷவின் ஆட்சி மக்களால் வெருப்படைந்த நிலையில் ஓரங்கட்டி விட்டனர். ஊழல் ஆட்சி ஒன்று மக்களுக்கு தேவையில்லை என்பதை உணர்ந்து புதிய நல்லாட்சியை மக்கள் விருப்பதிற்கேற்ப அமைத்துள்ளனர். ஆகவே இந்த நல்லாட்சியின் ஊடாக நாட்டின் மக்களும் தோட்ட தொழிலாளர்களும் சுபீட்சமாக வாழ்க்கையினை எதிர்காலத்தில் அனுபவிப்பார்கள் என்பதில் அச்சம் இல்லை.

இன்று நாட்டில் கற்றவர்கள் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். வேலைவாய்ப்பு தினம் தினம் அதிகரித்து செல்கின்றது. ஆகவே புதிய வேலைவாய்ப்புகளை ஈட்டி தருவதில் அரசு முனைப்புடன் செயலாற்றவுள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் நமது நாட்டில் தலைவிரித்தாடும் தொழில் பிரச்சினைக்கு தீர்வினை காண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -