மஜீட்புரத்தில் அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிப்பும் காசோலைதளபாடங்கள் வழங்கும் நிகழ்வும்..!

எம்.எம்.ஜபீர்-
ஜீட்புர கிராமத்தில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் தனித்து விடப்பட்ட மற்றும் பின்தங்கிய 10 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் 20 இலட்சம் ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்ட பல்தேவைக் கட்டிடம் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் 15 ஆயிரம் கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபா செலவில் செய்து முடிக்கப்பட்ட பாடசாலை மத்திய வீதிக்கான மதகு மற்றும் வடிகான் என்பன நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் பாவனைக்காக திறந்து கையளிக்கப்பட்டன.

இதன்போது மஜீட்புரம் ஜூம்மா பள்ளிவாசல் புனரமைப்பிற்கான காசோலை, ஹுஸ்னுல் மாஆ பவுண்டேசன் அமைப்பிற்கான தளபாடங்கள் என்பனவும் கையளிக்கப்பட்டன.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் கே.அருந்தவராஜா, முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.அன்வர், உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -