தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயம் அதிபர் எம்.எஸ்.எம்.சுஹார் தலைமையில் ஆசிரியர் தின விழாவை அண்மையில் நடாத்தியது. அல்ஹாஜ் அஸ்வர் பிரதம அதிதியாகவும், நொலேட்ஜ் பொக்ஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஸ்கர் கான் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் என்.எல்.சில்மி ஜுமான் உறுப்பினர்கள் ஏ.எஸ்.எம். ஸரூக், ஏ.ஆர்.எம்.ஹவூப், மௌலவி எம்.ஜே.எம். ஹஸன், எம்.எச்.எம்.முஸம்மில், ஏ.எச்.எம். அவ்ப் ஆகியோர் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
விழாவில் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதையும், கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.
