அட்டாளைச்சேனையின்
அவலம்..
எங்களுக்கு தேவை
இனிமேல் அல்ல இன்று
ஒன்று பட்டு அவலம் போக்க
தேசிய பட்டியல் ஒன்று.
ஊர் சேர்ந்து மகிழ்வதற்கும்
ஊர் மானம் காப்பதற்கும்
தலை நிமிர்ந்து நிற்பதற்கும்
ஒன்று பட்டு வாழ்வதற்கும்
வாக்குறுதி நிலைக்கட்டும்.
30 ஆண்டு தாகம்
எப்ப தீர்க்கும் தலைமை
விழி உறங்கா காத்திருக்கம்
இன்னார்க்கு இழிவு என்று
இறைவன் நாட்டமிருக்கு
சிரிக்கும் கூட்டமும் காத்திரிக்கு.
போராளி மனங்குளிர
உலமாக்கள் உனை வரவேற்க
பெரியார்கள் தனை ஏற்க
சிறார்கள் வாழ்வு சிறக்க
தேசிய பட்டியல் ஒன்றிருக்கு.
ஊர் வலமாய் அழைத்தோம்
மேடையில் அமர வைத்தோம்
ஊர் அவலம் எடுத்துரைத்தோம்
வாக்குறுதி மட்டுமல்ல
வார்த்தைகளும் நிலைத்திருக்கு.
சுற்றமும் போராளி நற்பும்
நாற்திசை சூழ்ந்து மகிழும்
சுற்றி உனை பெருமை மிதக்கும்
கெட்டவர் மனமும் உனை கவரும்
வாக்குறுதி நிலைக்குமென்றால்.
கலங்காத அட்டாளைச்சேனை ஊரு
காத்திருந்து வலிக்குது அதன் இதயம்
கண்ணீர் விடும் அவலம்
நிச்சயம் ஒரு நாள் வரும்
கை சேதம் என்று
தலைமையும் ஒரு நாள் அழும்.
அக்கரை ஊர் கவிஞன்
ஏ.எச். ஜூனைடீன்
அட்டாளைச்சேனை
