ஜனாதிபதி செயலகத்தில் தனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளாத முக்கிய அதிகாரிகள் பலரின் பதவியை பறிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார்.
தற்போதைக்கு முக்கிய துறைகளில் செயலாளர்களாக செயற்படுகின்றவர்களும், ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு செயலாளர்களில் சிலரும், ஒருசில ஆலோசகர்களும் பதவி பறிபோக உள்ளோரின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவர்களில் பலரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இருந்து ஜனாதிபதி செயலகத்தின் பதவிகளில் தொடர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக ஜனாதிபதி செயலகத்தினால் எடுக்கப்பட்ட சில முக்கியமான முடிவுகள் குறித்த விபரங்கள் வெளியாட்களுக்கு கசியவிடப்பட்டமை மற்றும் முக்கிய முடிவுகளை நடைமுறைப்படுத்தவிடாமல் தடை போடப்பட்ட விவகாரங்கள் என்பன காரணமாகவே இந்த பதவி பறிப்பு விடயம் நடைபெறவுள்ளது.
