ஊழல் மோசடி சம்பவங்கள் தொடர்பில் விரைவான விசாரணை மேற்கொள்ளும் வகையில் விசேட விசாரணைக் குழுவொன்றை உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தீர்மானித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஊழல்மற்றும் மோசடிகள் மலிந்திருந்த நிலையில் பொதுமக்கள் ஆட்சிமாற்றத்துக்காக வாக்களித்து, தற்போதைய அரசாங்கத்தை பதவியில் அமர்த்தியுள்ளனர்.
எனினும் இந்த அரசாங்கத்திலும் ஊழல் மற்றும் மோசடி சம்பவங்கள் குறைவின்றி நடந்து கொண்டிருப்பதுடன், அரசாங்கத்துக்கு கெட்ட பெயரையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசேட விசாரணைக்குழுவொன்றை உருவாக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இக்குழுவினருக்கு கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்படவுள்ளது.
இந்த விசாரணைக்கு குழு உருவாக்கப்பட்டவுடன் தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்படும் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
