இக்பால் அலி-
கண்டி நகர் முஸ்லிம் பள்ளி வாசல்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தேசிய அபிவிருத்திக்கான ஒருமைப்பாடு என்ற தொனிப்பொருளில் விசேட வைபவம் கண்டி குயின்ஸ் ஹோட்டலில் பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ.சித்தீக் தலைமையில் 18-10-2015 நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், அமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி உதவி இந்தியத் தூதுவர் ராதா வெங்கட்ராமன் ஆகியோர் உரையாற்றுவதையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் இங்கு காணலாம்.