இரு அமைச்சர்களுக்கு 6 கோடி ரூபா பெறுமதியான பீ.எம். டபிள்யு வாகனங்கள்..!

ல்லாட்சி அரசாங்கத்தில் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடியினதும் அவரது பிரதி அமைச்சர் அனோமா கமகேயினதும் பயன்பாட்டிற்கு 6 கோடி ரூபா பெறுமதியான பீ.எம். டபிள்யு. வாகனங்கள் இரண்டு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோலியத்றை நிறுவனமான சீ.பீ.எஸ்.ரி.எல். இன் நிதியினால் இந்த சொகுசு வாகனங்கள் இறக்குமதிக்கு அவசரமாக அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவினதும், புதிய பணிப்பாளர் சபையினதும் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர் பிரச்சினை, பவுஸர் பற்றாக்குறைப் பிரச்சினை, எரிபொருள் விலை தொடர்பான பிரச்சினை போன்றவற்றுக்குத் தீர்வு காணப்படாமல் அரசாங்கத்தின் நிதி சொகுசு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு உபயோகிக்கப்படுவது நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஒரு அவப்பெயராகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -