எம்.வை.அமீர்-
நடந்து முடிந்த பாராளமன்ற தேர்தலில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு யுக்திகளை கையாளவேண்டி இருந்தது. அதற்காக அக்கட்சி உச்ச அளவில் பலத்தை பாவிக்கவேண்டியும் ஏற்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒரு உறுப்பினரை பெற்றுக்கொள்ள எவ்வாறு உழைத்ததோ அதே போன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் எவ்வித ஒப்பந்தமும் இன்றி முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்களை பெறும் ஒரே நல்ல நோக்கத்துக்காக நாபீர் பௌன்டேசன் களத்தில் இரங்கி செயற்பட்டது.
அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல் ரீதியான மனோநிலையை புரிந்து கொண்ட நாபீர் பௌன்டேசனின் தலைவர் பொறியலாளர் நாபீர் அவர்கள் அவரது அமைப்பினருக்கு விடுத்த பணிப்புரையின் கீழ் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக களத்தில் இறக்கிவிடப்பட்டனர்.
அரசியலில் கால் வைப்பதற்காக ஏற்கனவே தன்னை பல்வேறு மட்டங்களிலும் அறிமுகம் செய்திருந்த யூ.கே.நாபீர், கடந்த தேர்தலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பிரதேசத்தின் முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்களின் குறைப்புக்கு தான் காரணமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றியிருந்தார்.
அம்பாறை மாவட்டத்தின் மூலை முடுக்கெங்கும் தனது நாபீர் பௌன்டேசனின் செயற்பாடுகளை விஸ்த்தரித்திருந்த யூ.கே.நாபீர், அகில இலங்கை மக்கள் காங்கிரசினால் உறுப்பினர்களை பெற முடியாது என்பதை ஆணித்தரமாக தெரிவித்து வந்தார்.
அம்பாறை மாவட்டத்தில் பல ஆயிரம் ஆதரவாளர்களைக் கொண்ட நாபீர் பௌன்டேசன், எதிர்காலத்திலும் அம்பாறை மாவட்ட அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்பதிலும் கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வெற்றிக்கு நாபீர் பௌன்டேசனின் பங்கு மறக்க முடியாதது என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.
