பிரதம பொறியியலாளர் வெற்றிடத்தை விரைவாக நிறப்ப வேண்டும்- உதுமாலெப்பை MPC

வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளராக கடமை புரிந்தவர் பதவி உயர்வு பெற்று சென்றதனால் ஏற்பட்ட வெற்றிடம் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருப்பதால் அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திப் பணிகள் தாமதம் அடைவதுடன் அம்பாறை மாவட்ட மக்கள் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்த கண்டியில் இருந்து பாணம வரை சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களாகவும், நீலாவனை தொடக்கம் பாணம வரை உள்ள கரையோரப் பிரதேசங்களில் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்திற்கான பிரதம பொறியியலாளர் பதவி வெற்றிடமாக உள்ளதால் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக தங்களின் கருமங்களை நிறைவேற்ற முடியாமல் அம்பாறை மாவட்ட மக்கள் பல அசௌகரியங்களையும் எதிர் நோக்கி வருகின்றனர் என கிழக்கு மாகாண சபையின் அமர்வு தவிசாளர் திரு.நிஹால் கலப்பதி தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இடமாற்றங்கள் செய்யப்படும் போது துறைகளுக்கிடையிலான இட மாற்றத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனும் பிரேரனையில் உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றுகையில்.....
திருமலை மாவட்டத்திற்கு பிரதம பொறியியலாளர் ஒருவர் தேவை அதற்கு பொறுத்தமான ஒருவரை இனங்கண்டு நியமித்து திருமலை மாவட்ட பாதை அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதே நேரம் நீண்ட காலமாக வெற்றிடமாக உள்ள அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் வெற்றிடத்தை நிரப்பி அம்பாரை மாவட்ட வீதி அபிவிருத்தி பணிகள் சிறப்பாக நடை பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -